குவைத் தீ விபத்து - கட்டட உரிமையாளர் உட்பட 3 பேர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் பலர் உயிரிழந்த நிலையில், கட்டடத்தின் உரிமையாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அகமதி மாகாணத்தின் மங்காஃப் நகரில் 6 மாடிகளை கொண்ட குடியிருப்பில் ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தின் ஊழியர்கள் ஏராளமானோர் தங்கியிருந்து பணிப்புரிந்து வந்தனர். இந்த கட்டடத்தின் சமையலறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தொழிலாளர்கள் பலர் வெளியே ஓடி தப்பிய நிலையில், அறைகளில் உறங்கி கொண்டிருந்த 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உட்பட 50 பேர் தீயில் கரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக குவைத் அரசு தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், கட்டடத்தின் உரிமையாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Night
Day