உலகம்
டிரம்ப் நிர்வாகத்திலிருந்து எலான் மஸ்க் விலகல்
டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் சூசகமாக தெரிவித்துள?...
கென்யாவில் பழமையான அணை உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக தலைநகர் நைரோபி வெள்ளத்தில் மிதக்கிறது. முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் இயல்புநிலை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அங்குள்ள மிகப்பழமையான அணையான கிஜாப் அணை வெள்ளத்தில் சேதம் அடைந்தது. தடுப்புச்சுவர் உடைந்ததில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்தது. இதனால், வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இந்த வெள்ளத்தில் சிக்கி இதுவரை 40 பேர் வரை பலியாகியுள்ளனர். மேலும் மாயமான நபர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் சூசகமாக தெரிவித்துள?...
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு எதிர்வினையாற்?...