கொரோனா போன்று சீனாவில் வேகமாக பரவும் புதிய வைரஸ் - மக்கள் அச்சம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கொரோனா பெருந்தொற்றை தொடர்ந்து தற்போது சீனாவில் வேகமாக பரவி வரும் புதிய வைரஸால் அந்நாட்டு மக்கள் மட்டுமில்லாமல் உலக நாடுகளை சேர்ந்த மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். 

HMPV என பெயரிடப்பட்டுள்ள புதிய வைரஸால் சுவாச நோய் ஏற்பட்டு பொதுமக்கள் அவதியுறுவதாக கூறப்படுகிறது. கொரோனோவை போன்றே இருமல், காய்ச்சல், மூக்கடைப்பு மற்றும் மூச்சுத்திணறல் ஆகியவை இதற்கு அறிகுறிகளாக கருதப்படும் நிலையில், இவை பெரும்பாலும் 14 வயதுக்குட்பட்டவர்களை தாக்குவதாக தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்டு மருத்தவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவதாக சீனா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Night
Day