கோடையில் புதிய 'ஹாரி பாட்டர்' படம் தொடங்கும் என இயக்குநர் மார்க் மைலோட் தகவல்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரியின் புதிய 'ஹாரி பாட்டர்' தொடரின் படப்பிடிப்பு வரும் கோடையில் லீவ்ஸ்டன் ஸ்டுடியோவில் தொடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. 


லண்டனில் உள்ள வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி தலைமையகத்தில் நிர்வாக தயாரிப்பாளர் ஷோரன்னர் பிரான்செஸ்கா கார்டினர் மற்றும் இயக்குனர் மார்க் மைலோட் ஆகியோர் இதனை தெரிவித்துள்ளனர். அதன்படி,  32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் முன்னணி பாத்திரங்களுக்கான தேர்வில் பங்கேற்றதாகவும், தினமும் ஆயிரம் குழந்தைகளை நடிக்க வைத்து தேர்தெடுப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இறுதி நடிகர்களின் தேர்வு முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருமே ஹாரிபாட்டர் தொடரில் நடிப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

Night
Day