சர்வதேச குற்றவியல் நீதிமன்ற உத்தரவை பின்பற்ற மறுக்கிறது இஸ்ரேல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காசா பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அவசரமாகத் தேவைப்படும் உதவிகளை வழங்க வேண்டும் என்ற சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை இஸ்ரேல் பின்பற்றவில்லை என ஐநா மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சாட்டியுள்ளது. இந்த விவகாரத்தில் ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டு நேற்றுடன் காலக்கெடு முடிவடைந்த நிலையிலும், இதுவரை  இஸ்ரேல் அதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறியுள்ளது. அதற்குப் பதிலாக காசா மக்களுக்கான அத்தியாவசியப் பொருள்களையும் கிடைக்க விடாமல் தடுத்து வருவதாகவும் நிவாரண உதவிகளில் ஈடுபடுவோரையும் தடுத்து வருவதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் புகார் தெரிவித்துள்ளது.

Night
Day