சார்ஜ் செய்யாமல் 50 ஆண்டுகள் வரை பயன்படுத்தக்கூடிய பேட்டரி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சார்ஜ் செய்யாமல் 50 ஆண்டுகள் வரை பயன்படுத்தக்கூடிய பேட்டரியை சீன நிறுவனமொன்று உருவாக்கி அசத்தியுள்ளது. 2021 மற்றும் 2025-க்கு இடையில் பொருளாதாரத்தை வலுப்படுத்த 14-வது ஐந்தாண்டு திட்டத்தை சீனா  செயல்படுத்தியுள்ளது. அதன்படி சீனாவின் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ஒன்றான 'பீட்டா வோல்ட் புதிய வகை பேட்டரியை தயாரித்திருப்பதாக அறிவித்திருக்கிறது. தங்கள் பேட்டரி 50 ஆண்டுகள் நீடிக்கும் என்றும், சாதாரண பேட்டரிகளைப் போல நிலையான சார்ஜிங் அல்லது பராமரிப்பு தேவைப்படாது என்றும் பீட்டா வோல்ட் நிறுவனம் உத்தரவாதம் அளித்திருக்கிறது. சோதனைகளுக்கு பின் அவை தொலைபேசிகள் மற்றும் ட்ரோன்கள் போன்றவற்றில் வணிக பயன்பாட்டிற்காக தயாரிக்கப்படும் என்று பீட்டா வோல்ட் நிறுவனம் கூறியுள்ளது.

Night
Day