சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் விரைவில் அழிந்து விடும் - எலான் மஸ்க் கூறிய கருத்தால் அதிர்ச்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் விரைவில் அழிந்து விடும் என உலக பெரும் தொழிலதிபர் எலான் மஸ்க் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி இருக்‍கிறது.

இது குறித்து எலான் மஸ்க் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், சிங்கப்பூரில் குழந்தை பிறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்திருப்பதாக வெளியான தகவலை மேற்கோள்காட்டியுள்ளார். மரியோ நாவ்பால் என்பவர் கடந்த பல பத்தாண்டுகளில் சிங்கப்பூரின் குழந்தை பிறப்பு விகிதமானது பெரிய அளவில் சரிந்துவந்துள்ளது என்றும், கடந்த  ஆண்டு சிங்கப்பூரின் குழந்தை பிறப்பு விகிதம் எங்கும் இல்லாத அளவுக்கு 0.97 ஆக குறைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஒரு பெண் தனது முதல் குழந்தையை பெறும் வயதான 25 -34 வரை பெரும்பாலும் திருமணமாகாமல் இருப்பதால், 20 வயதில் குழந்தை பெறும் பெண்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து விட்டதாகவும் கூறியுள்ளார். 

Night
Day