சிரியாவின் போரிலிருந்து அமெரிக்க ராணுவம் விலக வேண்டும் - டிரம்ப்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சிரியாவில் நடைபெறும் உள்நாட்டு போரிலிருந்து அமெரிக்க ராணுவம் விலகி இருக்க வேண்டும் என அதிபராக பதவியேற்க உள்ள டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், சிரியாவில் பல நகரங்களை முழுவதுமாக கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள், தற்போது டமாஸ்கஸில் உள்ள அதிபர் அசாத்தை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும், சிரியாவிற்கு ஆதரவளிக்கும் ரஷ்யா, ஏற்கனவே உக்ரைன் உடனான போரில் 6 லட்சம் வீரர்களை இழந்ததால், உள்நாட்டு மோதலை தடுக்க முடியாது எனவும் கூறினார். சிரியாவில் குழப்பம் நீடிப்பதாகவும், ஆனால் அவர்கள் யாரும் நமக்கு நண்பர் அல்ல எனவும் தெரிவித்தார். 

Night
Day