சிரியாவில் தீவிரமடைந்துள்ள உள்நாட்டு போர் - 4வது முக்கிய நகரத்தை கைப்பற்றிய சிரிய கிளர்ச்சியாளர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சிரியாவில் தற்போது உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ள நிலையில், பத்து லட்சம் மக்கள் வசிக்கும் 4-வது பெரிய நகரத்தையும் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.

அதிபர் அல்-அசாத் அரசுக்கு எதிராக ஆயுதமேந்தி போராடி வரும் கிளர்ச்சியாளர்கள், அரசு படைகள் வசமிருக்கும் நகரங்களை தொடர்ச்சியாக கைப்பற்றி வருகின்றனர். அலெப்போ, டெல்ரிப்ஃபாட் ஆகிய நகரங்களை தொடர்ந்து ஹமா நகரை தங்கள் வசம் கொண்டு வந்த சிரிய கிளர்ச்சியாளர்கள், சிறையில் இருந்த கைதிகளை விடுவித்தனர். இதை தொடர்ந்து, 4வது நகரமாக தாராவின் தெற்கு நகரத்தை கைப்பற்றியதாக தெரிவித்துள்ளனர். 

Night
Day