சிரியா அதிபர் நாட்டை விட்டு தப்பியோட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சிரியா தலைநகர் டமாஸ்கஸை கிளர்ச்சியாளர்கள் சுற்றி வளைத்ததால், அந்நாட்டு அதிபர் பஷர் அல் அசாத் நாட்டை விட்டு தப்பியோடியதாக தகவல் வெளியாகியுள்ளது. 


சிரியாவில் கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டுப் போரில், ரஷ்யா உதவியுடன் அந்நாட்டு அதிபா் அல்-அஸாத் தலைமையிலான ராணுவம், டமாஸ்கஸ், அலெப்போ, ஹாம்ஸ், ஹாமா உள்ளிட்ட முக்கிய நகரங்களை தன் வசம் வைத்திருந்தன. இத்லிப், ராக்கா உள்ளிட்ட சில பகுதிகளை மட்டும் தன் வசம் வைத்திருந்த கிளா்ச்சியாளர்கள், கடந்த வாரம் திடீரென தாக்குதல் நடத்தி சிரியாவின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போவை கைப்பற்றினா். தொடா்ந்து, மற்றொரு முக்கிய நகரான ஹமாவையும் கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள், தற்போது தலைநகா் டமாஸ்கஸை சுற்றி வளைத்துள்ளதாக கூறப்படுகிறது.  

மேலும், செட்னாயா சிறையில் அடைக்கப்பட்டிருந்த கிளர்ச்சி குழுக்களை சேர்ந்தவர்களை விடுவித்த கிளர்ச்சியாளர்கள், இதனை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், கிளர்ச்சி குழுக்களை கட்டுப்படுத்த முடியாததால், தலைநகர் டமாஸ்கஸிலிருந்து அதிபர் பஷர் அல்-அசாத் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றத்தால், டமாஸ்கஸ்- பெய்ரூட்டை இணைக்கும் போக்குவரத்தை தவிர, பிற அனைத்து வாயில்களையும் மூடுவதாகவாக லெபானான் அறிவித்துள்ளது. 50 ஆண்டுகால அடக்குமுறை, குற்றச்செயல் என அனைத்து வகையான ஆக்கிரமிப்பு சக்திகளையும் எதிர்கொண்டு, இருண்ட சகாப்தத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாகவும், இவை சிரியாவிற்கு ஒரு புதிய சகாப்தம் எனவும் கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

varient
Night
Day