சீனாவில் தங்கம் விற்கும் ஏடிஎம் அறிமுகம்; பயனர்கள் மகிழ்ச்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சீனாவில் தங்கத்தை விற்கும் ஏடிஎம்-ஐ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஷாங்காயில் உள்ள ஒரு மாலில், பயனர்கள் தங்கள் தங்க நகைகளை விற்று 30 நிமிடங்களுக்குள் பணம் பெறும் வகையில் ஒரு ATM-ஐ கிங்ஹுட் குழுமம் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், இதற்கு எந்த காகித வேலைகளும் தேவையில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட் கோல்ட் ஏடிஎம், தங்கப் பொருட்களை பகுப்பாய்வு செய்து, உருக்கி, எடைபோட்டு, அவற்றின் தூய்மையை தீர்மானித்து, அதற்கு சமமான தொகையை நேரடியாக விற்பனையாளரின் வங்கிக் கணக்கிற்கு மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இது மூன்று கிராமுக்கு மேல் எடையுள்ள தங்கப் பொருட்களை குறைந்தபட்சம் 50 சதவீத தூய்மை நிலையுடன் ஏற்றுக்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Night
Day