சீனாவை புரட்டிப் போடப் போகும் பெபின்கா புயல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சீனாவை பெபின்கா புயல் நெருங்கியுள்ள நிலையில் அந்நாட்டு தேசிய வானிலை மையம் பலத்த காற்று மற்றும் அதீத கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த ஆண்டின் 13-வது புயலான பெபின்கா, இன்று காலை ஜியாங்சு மாகாண கடற்கரையோரத்தில் கரையைக் கடக்கும் எனத் தெரிவித்துள்ளது. இதனால் பிங்கு நகரத்திலிருந்து ஷாங்காய் புடாங் பகுதி வரையிலான கடலோரப் பகுதிகளில் கடுமையான பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெபின்கா புயல், 1949 க்குப் பிறகு ஷாங்காயைத் தாக்கும் வலிமையான புயலாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஷாங்காய் விமான நிலையங்களில் 600-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Night
Day