சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் தொடர்ந்து சிக்கல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பால்கன் 9 ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது. 

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்‍கு சென்று தங்கி ஆய்வு செய்ய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்சும், புட்ச் வில்மோரும் கடந்த ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி போயிங்கின் ஸ்டார்லைனரில் 10 நாள் பயணமாக சென்றனர். ஆனால், ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக இருவரும் 9 மாதங்களாக விண்வெளி நிலையத்திலிருந்து திரும்ப இயலாமல் தவிக்‍கின்றனர்.

இதனிடையே, அதிகாலை 5.18 மணிக்கு புளோரிடாவில் இருந்து டிராகன் விண்கலத்துடன் சீறிப்பாய தயாராக இருந்த பால்கன் 9 ராக்கெட்டில் ஹைட்ராலிக் இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இந்த தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்ட பின் இந்திய நேரப்படி நாளை அதிகாலை 4.56 மணிக்கு ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் என நாசா தெரிவித்துள்ளது.

Night
Day