சுறா மீன் தாக்கி நடிகர் தமயோ பெர்ரி உயிரிழப்பு!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் நடிப்பில் வெளியான பைரேட்ஸ் ஆப் தி கரீபியன் படத்தில் நடித்திருந்த தமயோ பெர்ரி, சுறா மீன் தாக்கியதில் உயிரிழந்தார். நடிகராக இருந்தததுடன் அலைச்சறுக்கு விளையாட்டு பயிற்சியாளர், நீரில் தவறி விழுந்து விழுந்தவர்களை  மீட்டு கரைக்கு கொண்டு வரும் உயிர்காப்பாளர் பணியையும் தமயோ பெர்ரி செய்து வந்துள்ளார். இந்தநிலையில், ஹவாய் தீவில் உள்ள உவாஹு பகுதியில் கோட் தீவில் சுறா ஒன்று அவரை கடுமையாகத் தாக்கியுள்ளது. இதில் அவர் உயிரிழந்து விட்டார். இதையடுத்து அந்தப் பகுதியில் சுறா தாக்குதலுக்கான எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இதனால் அலைச்சறுக்கு மற்றும் கடற்கரைக்கு செல்பவர்கள் இடையே பதற்றம் மற்றும் அச்சநிலை ஏற்பட்டுள்ளது.

Night
Day