சூடானில் தலை தூக்கிய உள்நாட்டு போர் - ராணுவம் நடத்திய தாக்குதலில் 127 பேர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சூடானில் தலை தூக்கியுள்ள உள்நாட்டு போரின் காரணமாக கடந்த இரண்டு நாட்களில் 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

கடந்த 2019ம் ஆண்டு  சூடானின் முன்னாள் அதிபர் உமர் அல் பஷீர் உயிரிழந்ததையடுத்து, ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையில் அதிகாரத்துக்கான போட்டி நடந்து வந்த நிலையில், இவை 2023ம் ஆண்டு உள்நாட்டுப்போராக வெடித்தது. கடந்த 20 மாதமாக தீவிரமாக நடைபெற்று வரும் உள்நாட்டு போரில், இதுவரை பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்த நிலையில், லட்சக்கணக்கானோர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். இந்நிலையில், துணை ராணுவம் கட்டுப்பாட்டில் இருந்த டார்பூர் நகரத்தில் ராணுவப்படை நடத்திய வான்வழி தாக்குதலில் சுமார் 127 பேர் உயிரிந்தனர். மேலும் துணை ராணுவம் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தாக்குதல் நடத்த ராணுப்படை உத்தரவிட்டுள்ளதால், சூடானில் பதற்றம் அதிகரித்துள்ளது.

Night
Day