செயற்கை நுண்ணறிவியலால் 40 சதவீதம் பேரின் வேலை பறிபோகும்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

AI எனப்படும் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி காரணமாக, உலகம் முழுவதும் 40 சதவீதம் வேலைகள் பறிபோகும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு தீவிரமடைந்துள்ள நிலையில், அது வேலை வாய்ப்பை பாதிக்கும் அபாயம் அதிகரித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் மேலான் இயக்குநரான கிரிஸ்டாலினா ஜியார்ஜீவா, தனது சமூக வளைதள பக்கத்தில், செயற்கை நுண்ணறிவியல் ஆச்சரியத்தையும், அபாயத்தையும் ஒருங்கே ஏற்படுத்துவதாகக் கூறியுள்ளார். உலக பொருளாதாரத்தில் எந்த விதமான தாக்கத்தை செயற்கை நுண்ணறிவியல் ஏற்படுத்தும் என்ற கேள்வி எழுந்துள்ளதாக தெரிவித்த கிரிஸ்டாலினா, பல்வேறு விதமான பணிகளை செயற்கை நுண்ணறிவியல் கபளீகரம் செய்யும் என்பதை உறுதிப்படுத்தி உள்ளார். மனித வேலையை குறைக்கும் செயற்கை நுண்ணறிவு, 40 சதவீத பேரின் வேலையை காவு வாங்கும் என கிரிஸ்டாலினா குறிப்பிட்டுள்ளார்.

Night
Day