சேனல்களுக்கு தடை விதிக்க வேண்டும் - வங்காளதேச உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய தொலைக்காட்சி சேனல்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வங்காளதேச உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வங்காளதேசத்தில், ஸ்டார் ஜல்சா, ஸ்டார் பிளஸ், ஜீ பங்களா மற்றும் ரிபப்ளிக் பங்களா போன்ற இந்திய தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சேனல்களில் ஒளிபரப்பப்படும் ஆத்திரமூட்டும் செய்திகள் வங்காளதேச இளைஞர்களை அழிவுக்கு இட்டுச் செல்வதால் அந்த சேனல்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வங்காளதேச உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி பதீமா நஜிப் மற்றும் சிக்கர் மஹமுதூர் ராசி அமர்வில் விரைவில் விசாரணைக்கு வரஉள்ளது.

Night
Day