ஜப்பான் - அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜப்பானில் அடுத்தடுத்து நிகழ்ந்த சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் இருக்கும் கியூஷூ, ஷிகோகோ தீவுகளில் சுமார் 20 மீட்டர் உயரத்துக்கு கடல் அலைகள் எழும், எனவே மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஜப்பானில் முதல் நிலநடுக்கம் மியாசாகி கடற்கரையிலிருந்து 20 மைல் தொலைவில் கியூஷுவில் காலை 4 மணிக்கு ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து ஒரு நிமிடத்திற்குள் 7.1 ரிக்டர் அளவில் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் ஜப்பானில் உள்ள மக்கள் மிகவும் பீதியடைந்தனர். ஜப்பானில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் இதுவரை உயிரிழப்புகள்ஏதும் பதிவாகவில்லை. அதேசமயம் நிலநடுக்கம் நடைபெற்ற பகுதியை பேரிடர் குழு கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

Night
Day