ஜப்பான்: டோமினோஸ் பிசா உணவகத்தில் ஊழியர் செய்த அருவறுக்கத்தக்க செயல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜப்பானில் டோமினோஸ் பிசா உணவகத்தில் ஊழியர் ஒருவர் செய்த அருவறுக்கத்தக்க செயலுக்கு அந்நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. ஜப்பானில் உள்ள டோமினோஸ் பிசா உணவகத்தில் பணி செய்து கொண்டிருந்த ஊழியர் ஒருவர் தனது மூக்குக்குள் விரலை வைத்துவிட்டு, அதே விரலால் பிசா தயாரிக்கும் மாவில் கையை வைத்து பிசைவது போன்ற வீடியோ இணையத்தில் வைரலானது. இதனைக்கண்ட, வாடிக்கையாளர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். இதனையடுத்து, டோமினோஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது. இதுபோன்ற, தவறுகள் இனி நடைபெறாது என்றும், அந்த ஊழியர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

varient
Night
Day