ஜோ பைடன் மறுதேர்தல் முயற்சியில் முக்கிய அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்ப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது மறுதேர்தல் முயற்சியில் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் உடல் நலக் குறைவு, முன்னாள் அதிபத் டொனால்ட் டிரம்ப் மீதான தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால் ஜனநாயகக் கட்சிக்கு வாக்கு எண்ணிக்கை குறைய அதிக வாய்ப்புகள் இருப்பதாக கருத்து கணிப்புகள் தகவல் தெரிவிக்கின்றன. மேலும் ஜோ பைடனின் வயது மூப்பு காரணமாக அவரை போட்டியிலிருந்து விலகுமாறும் முன்னாள் அதிபர் ஒபாமா உள்ளிட்ட மூத்த தலைவர்களும் வலியுறுத்துகின்றனர். இந்நிலையில் தனது தேர்தல் முயற்சி குறித்து ஜோ பைடன் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

Night
Day