எழுத்தின் அளவு: அ+ அ- அ
மத்திய கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள டானா புயலால், ஒடிசா, மேற்கு வங்க மாநிலத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதால் புயலாக உருமாறியுள்ளது. இதற்கு, கத்தார் நாட்டின் பரிந்துரையின்படி டானா என பெயரிட்டுள்ள வானிலை ஆராய்ச்சியாளர்கள், நடப்பாண்டின் 3வது புயல் எனவும், வடகிழக்கு பருவமழை கால முதலாவது புயல் எனவும் தெரிவித்துள்ளனர்.
டானா புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தீவிர புயலாக வலுப்பெறக் கூடும் எனவும், 25ஆம் தேதி அதிகாலையில் ஒடிசாவின் பூரி - சாகர் தீவுகளுக்கும் இடையே கரையை கடக்கும் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் டானா புயல் காரணமாக ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்திற்கு 24, 25 ஆகிய நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், புயல் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளது.