டொனால்ட் ட்ரம்ப் அரிசோனா மாகாணத்தில் வெற்றி பெற்றதாக அறிவிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் அரிசோனா மாகாணத்திலும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவருக்கு மேலும் 11 எலக்டோரல் வாக்குகள் கிடைத்துள்ளன. தற்போதைய புள்ளிவிபரங்களின்படி ட்ரம்ப் இதுவரை 312 வாக்குகளைப் பெற்றுள்ளார். ஜனநாயகக் கட்சி வேட்பாளரான கமலா ஹாரிஸ் 226 வாக்குகள் பெற்றுள்ளார். கடந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சிக்கு வாக்களித்த ஜார்ஜியா, பென்சில்வேனியா, மிச்சிகன் மற்றும் விஸ்கான்சின் ஆகிய ஸ்விங் மாநிலங்கள் இந்த முறை ட்ரம்புக்கு கைகொடுத்துள்ளன. அதனால்தான் கடந்த 2016 அதிபர் தேர்தலில் 304 வாக்குகள் பெற்ற ட்ரம்ப் இம்முறை 312 வாக்குகளை தட்டிச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது

Night
Day