தனது 3-வது ஆட்சி காலத்தில் 3 கோடி வீடுகள் கட்டித் தர இலக்கு - பிரதமர் மோடி உரை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மூன்றாவது முறையாக தொடரும் தமது ஆட்சியில் மூன்று கோடி ஏழைகளுக்கு வீடு கட்டித்தர இலக்கு நிர்ணயித்து இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

இந்தியா - ரஷ்யா இடையேயான 22து உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மாஸ்கோ சென்றுள்ள பிரதமர் மோடி, இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்திய கிராமங்களில் செயல்படும் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு அதிகாரம் வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறினார். மூன்றாவது முறையாக தொடரும் தமது ஆட்சியில் மூன்று கோடி ஏழைகளுக்கு வீடு கட்டித் தர இலக்கு நிர்ணயித்திருப்பதாக கூறிய பிரதமர் மோடி, கிராமங்களில் உள்ள ஏழை பெண்கள் 3 கோடி பேரின் ஆண்டு வருமானத்தை ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். உலகில் வேறு எந்த நாடும் சென்றடைய முடியாத நிலவின் பகுதிக்கு சந்திரயானை இந்தியா எடுத்துச் சென்றுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் நம்பகமான மாதிரியை உலகிற்கு இந்தியா வழங்கி வருவதாகவும், உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பைக் கொண்ட நாடாக இந்தியா திகழ்வதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். 

Night
Day