தாய்லாந்து : ஒரே பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தாய்லாந்தில் ஒரே பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்க வகை செய்யும் திருமண சமத்துவ மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம், ஆண்-பெண் திருமணம் போலவே, ஒரே பாலினத்தைச் சேர்ந்த இருவர் திருமணம் செய்தால் அவர்களுக்கும் சம உரிமைகள் கிடைப்பது சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவில் 'ஆண் மற்றும் பெண்' என்ற வார்த்தைகள் 'தனிநபர்கள்' என்றும் 'கணவன் மற்றும் மனைவி' என்ற வார்த்தைகள் 'மணம் புரிந்த இணையர்கள்' எனவும் மாற்றப்பட்டுள்ளது. 

varient
Night
Day