திருமணம் முடிந்த 3 நிமிடங்களில் விவாகரத்து!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

குவைத்தில் திருமணம் முடிந்த 3 நிமிடங்களில் ஒரு தம்பதி விவாகரத்து செய்து கொண்ட விநோதம் அரங்கேறியுள்ளது. நீதிபதி முன் திருமணம் செய்து கொண்டு மணமக்கள் நீதிமன்றத்தை விட்டு வெளியேறிய போது மணமகள் சிறிது தடுமாறியுள்ளார். இதனைப் பாத்த கணவர், ''பார்த்து நடக்க மாட்டாயா முட்டாள்'' எனத் திட்டியுள்ளார். இதைக் கேட்டு கோபமடைந்த அந்தப் பெண், தங்கள் திருமணத்தை உடனடியாக ரத்து செய்யுமாறு நீதிபதியிடம் கேட்டுக் கொண்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அவர்கள் திருமணம் செய்துகொண்ட மூன்றே நிமிடங்களில் ரத்து செய்து உத்தரவிட்டார். இது நாட்டின் வரலாற்றில் மிகக் குறுகிய கால திருமணம் என்று கூறப்படுகிறது. இதற்கு முன் இங்கிலாந்தில் திருமணமாகி 90 நிமிடத்தில் ஒரு தம்பதி விவாகரத்து செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Night
Day