தீப்பற்றி எரிந்த இலங்கை ஜெட் விமானம் - உயிர் தப்பிய இரு விமானிகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானம் ஒன்று விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான K8 பயிற்சி ஜெட் விமானம், திரிகோணமலையில் உள்ள சீன விரிகுடா விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்டது. இந்தநிலையில், வாரியபொல மினுவங்கொட பகுதியில் விமானம் சென்ற போது, திடீரென தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானம் முற்றிலுமாக தீயில் கருகி சேதமடைந்தது. எனினும் விமானத்தில் பயணம் செய்த இரு விமானிகள், பாராசூட் உதவியுடன் நல்வாய்ப்பாக உயிர் தப்பியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரேடார் தொழில்நுட்ப அமைப்பின் செயலிழப்பு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day