தென்னாப்பிரிக்கா : 165 அடி பள்ளத்தாக்கில் விழுந்து தீப்பிடித்து எரிந்த பேருந்து - 45 பேர் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்னாப்பிரிக்காவில் ஈஸ்டர் கொண்டாட்டத்திற்கு சென்றவர்களின் பேருந்து பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்தனர். வடக்கு கிழக்கு லிம்போபோ பிராந்தியத்தில் இருந்து சிலர், மோரியா நகரில் நடைபெற்ற தேவாலய பிரார்த்தனையில் பங்கேற்க சென்றுள்ளனர். மமத்லகாலா பகுதியில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பாலத்தை உடைத்துக் கொண்டு, 165 அடி பள்ளத்தாக்கில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இதில் 45 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

varient
Night
Day