தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் டெனால்ட் டிரம்பை விட கமலா ஹாரிஸ் 3 சதவீதம் முன்னிலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான தற்போதைய கருத்துக்கணிப்பில் டொனால்ட் டிரம்ப்பை விட 3 சதவீதம் கூடுதலாக ஆதரவை பெற்று கமலா ஹாரிஸ் முன்னிலையில் உள்ளார். அடுத்த மாதம் ஐந்தாம் தேதி நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசுக்கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப்பும், ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிசும் போட்டியிடும் நிலையில், இதற்கான பிரச்சாரத்தில் இரு கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், கமலா ஹாரிசுக்கு ஆதரவாக 46 சதவீதத்தினரும், டொனால்ட் டிரம்புக்கு 43 சதவீதத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இருப்பினும் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் கமலா ஹாரிசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.  



Night
Day