தைவானில் ஆட்சியை பிடித்தது ஜனநாயக முற்போக்கு கட்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தைவானில் நடைபெற்ற தேர்தல் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஜனநாயக முற்போக்கு கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. அக்கட்சியின் லாய் சிங் டே அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சீன ஆதரவு நிலைப்பாட்டை எடுத்த எதிர்க்கட்சி வேட்பாளர்கள் கே. எம்.டி. கட்சியை சேர்ந்த நியூ தாய்பேய் நகர மேயர் ஹவ் யூ ஐஹ், முன்னாள் தாய்பேய் மேயரும் தாய்வான் மக்கள் கட்சியை சேர்ந்த கோ வென் ஜே ஆகியோருக்கு தக்க பாடம் புகட்டியுள்ள தைவான் மக்கள், தங்கள் சுதந்திரமான வாழ்க்கைக்கு ஜனநாயக முற்போக்கு கட்சியின் ஆட்சி தான் சிறந்தது என முடிவெடுத்துள்ளனர். தேர்தல் முடிவுகளை கண்டு அமெரிக்கா மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில், சீனாவும் ஆத்திரம் அடைந்துள்ளது.

Night
Day