தைவான் எல்லைக்குள் சீன ஊடுருவதாக குற்றச்சாட்டு..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தைவான், தனது எல்லைக்குள் சீன ஊடுருவல்களை அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது. 


தைவானை தனது நாட்டின் ஒரு பகுதி என சீனா கூறி வருகிறது. அதன்படி, அவ்வபோது போர் விமானங்கள் மற்றும் கடற்படை கப்பல்களை தைவான் எல்லைக்கு அனுப்பி அச்சுறுத்தி வருகிறது. இதனிடையே நேற்று சீனாவின் 9 விமானங்கள் மற்றும் 9 கடற்படை கப்பல்கள், தைவான் எல்லைக்குள் நுழைந்தாகவும், இவற்றில் 6 விமானங்கள் இடைநிலை கோட்டைக் கடந்து தென்மேற்கு வான் அடையாள மண்டலத்தில் நுழைந்ததாகவும் தெரிவித்துள்ளது. மேலும், தாங்கள் நிலைமையை கண்காணித்து அதற்கேற்ப பதிலளித்துள்ளதாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

Night
Day