தொடர்ந்து 3 ஏவுகணை சோதனையை நடத்திய வடகொரியா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனைக்கு ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கொரிய தீபகற்ப பகுதியில் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகள் மூலம் வடகொரியா அடிக்கடி பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் நீண்ட தூர ஏவுகணை சோதனை நடத்த வடகொரியாவுக்கு ஐ.நா. தடை விதித்துள்ளது. இதற்கிடையே தங்களின் பாதுகாப்பு கருதி தென்கொரியாவும், ஜப்பானும் அமெரிக்காவுடன் இணைந்து கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபடுகின்றன. இதனால் ஆத்திரம் அடைந்த வடகொரியா நேற்று தொடர்ச்சியாக மூன்று ஏவுகணை சோதனையை நடத்தியது. இவை வடகொரியாவின் எல்லையில் இருந்து 350 கிலோ மீட்டர் தூரம் பறந்து சென்று ஜப்பான் கடற்பகுதியில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

Night
Day