நமீபியா அதிபர் ஹஜி ஜிங்கொப் காலமானார் - தலைவர்கள் இரங்கல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நமீபியா நாட்டு அதிபர் ஹஜி ஜிங்கொப் புற்றுநோயால் காலமானார். அவருக்கு வயது 82. கடந்த சில மாதங்களுக்கு முன் வழக்கமான மருத்துவ பரிசோதனையின் போது, அவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து தலைநகர் விண்ட்ஹொக்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி ஹஜி ஜிங்கொப் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதிபர் உயிரிழந்த நிலையில், நங்கொலா முபுமா இடைக்கால அதிபராக செயல்பட்டு வருகிறார். 

Night
Day