நாசா விண்வெளி ஆய்வு மையத்திற்கு புதிய தலைவரை நியமித்தார் டிரம்ப்..!!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்‍காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத் தலைவராக ஜாரெட் ஐசக்மேனை நியமித்து புதிய அதிபராக உள்ள டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். 


அமெரிக்காவில் கடந்த 5-ந்தேதி நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி குடியரசு கட்சியை சேர்ந்த டிரம்ப் வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து பல்வேறு பதவிகளுக்கு உரிய நபர்களை அவர் நியமித்து வருகிறார். அந்தவகையில், நாசாவின் தலைவராக ஜாரெட் ஈசாக்மேனை நியமித்துள்ளார். இவர் ஷிப்ட்4 என்ற ஆன்லைன் பணபரிமாற்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார். அத்துடன் டிராகன் இன்டர்நேஷனல் நிறுவனராகவும் உள்ளார். ஜாரெட் ஐசக்மேன், எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், தன்னை இந்த பதவிக்கு பரிந்துரை செய்ததற்காக டிரம்பிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Night
Day