நாட்டு மக்‍களிடம் மன்னிப்பு கோரினார் அதிபர் யூன் சுக் இயோல்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்கொரியாவில் ராணுவ ஆட்சியை மீண்டும் அமல்படுத்த மாட்டேன் என்றும் தம்மை மன்னித்து விடுமாறு அந்நாட்டு அதிபர் யூன் சுக் இயோல் கேட்டுக்‍கொண்டுள்ளார்.

தென் கொரியாவில், அடுத்தாண்டு பட்ஜெட் தொடர்பாக ஆளும் மக்கள் சக்தி கட்சிக்கும், பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கும் மோதல் போக்கு நிலவியது. இதை அடுத்து அவசரநிலை ராணுவ சட்டம் பிரகடனப்படுத்தப்படுவதாக அதிபர் யூன் சுக் இயோல் அறிவித்தார். அதற்கு நாடு முழுவதும் மக்‍களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, அவசர நிலையில் அதிபர் யூன் திரும்ப பெற்றார். இந்நிலையில், தொலைக்காட்சி வழியே நாட்டு மக்களிடம் உரையாற்றிய  அவர்,  மக்களை கவலை அடைய செய்ததற்கு வருத்தம் தெரிவித்து கொள்வதாகவும், ராணுவ ஆட்சி அமல்படுத்தியதற்கு தன்னை 
மன்னித்து விடுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

varient
Night
Day