நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியாவின் பங்கை நிரூபிப்பதற்கான வலுவான ஆதாரங்கள் வழங்கப்படவில்லை - கனடா பிரதமர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியாவின் பங்கை நிரூபிப்பதற்கான வலுவான ஆதாரங்கள் வழங்கப்படவில்லை என்று இந்தியா தொடர்ந்து கூறி வருவதை கனடா பிரதமர் உறுதிபடுத்தியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

நிஜ்ஜார் கொலை வழக்கில் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் அதிகரித்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் இந்தியாவின் பங்கை நிரூபிக்க தங்களிடம் வலுவான ஆதாரங்கள் இல்லை என்றும், உளவுத் தகவல் அடிப்படையில் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகவும் கடனா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார். 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள வெளியுவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால், இந்திய தூதர் மற்றும் தூதகரக அதிகாரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு கனடா எந்த ஆதாரங்களையும் அளிக்கவில்லை என்று இந்தியா தொடர்ந்து கூறி வந்ததை கனடா பிரதமர் தற்போது உறுதிபடுத்தியிருப்பதாக கூறியுள்ளார். இந்தியா - கனடா உறவில் விரிசல் ஏற்பட்டதற்கான முழு பொறுப்பும் கனடா பிரதர் மட்டுமே என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

இதனிடையே, இந்த விவகாரத்தில் ஜஸ்டின் ட்ரூடோவின் சொந்த கட்சியில் இருந்தே அவருக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவர் பதவி விலக வேண்டும் என்று லிபரல் கட்சி எம்பி சீன் கேசி பகிரங்கமாக போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.  

Night
Day