நேபாளம் விமான விபத்தில் சிக்கி உயிரிழந்த 18 பேரின் உடல்கள் மீட்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் சிறிய ரக பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதில் 18 பேர் உயிரிழந்தனர்.

காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சவுரியா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான சிறிய ரக விமானம், பொக்கரா விமான நிலையத்திற்கு புறப்பட்டது. அப்போது ஓடு பாதையிலிருந்து திடீரென விலகிய விமானம் அருகிலிருந்த பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் விமானம் தீப்பிடித்து எரிந்த நிலையில், உடனடியாக மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. விபத்துக்குள்ளான இவ்விமானத்தில் 2 ஊழியர்கள் உட்பட 19 பேர் பயணித்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். விமானி மட்டும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் விபத்தின் காரணமாக நேபாளத்தின் முக்கிய விமான நிலையமான திரிபுவன் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. இந்நிலையில் விமானம் விபத்துக்குள்ளாகும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.


Night
Day