நைஜீரியாவில் கடந்த இரு தினங்களில் பொதுமக்கள் 100 பேரை கடத்திய ஆயுதக்குழுவினர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நைஜீரியாவில் கடந்த இரு தினங்களில் பொதுமக்கள் 100 பேரை ஆயுதக்குழுவினர் கடத்தியுள்ளனர். நைஜீரியாவின் வடக்கு பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஆயுதக் குழுக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்தும் நிகழ்வுகள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன், கதுனா மாநிலத்தில் கிட்டத்தட்ட 300 மாணவர்களை ஆயுதக்குழுவினர் கடத்திச் சென்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஜுரு கவுன்சில் பகுதியில் துப்பாக்கிகளுடன் நுழைந்த ஆயுதக்குழுவினர், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி, 14 பேரை கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் கஜுரு-ஸ்டேசன் சமுதாய மக்கள் மீது தாக்குதல் நடத்தி 87 பேரை கடத்திச் சென்றதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

Night
Day