பசியால் வாடும் மக்களுக்கு உணவளிக்க 200 யானைகளை கொல்ல ஒப்புதல் - ஜிம்பாப்வே

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜிம்பாப்வேயில் கடும் வறட்சி காரணமாக பசியால் வாடும் குடிமக்களுக்கு உணவு வழங்குவதற்காக 200 யானைகளை அழிப்பதற்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக, அரசு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், யானைகளைக் கொல்வது ஒரு கடினமானது ஆனால் மனிதாபிமானத் தேர்வு எனக் கூறியுள்ளது. இது சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிப்பதுடன் மீதமுள்ள வனவிலங்குகள் செழித்து வளர்வதை உறுதி செய்வதாகவும் தெரிவித்துள்ளது. முன்னதாக வறட்சியால் மக்களுக்கு உணவளிக்க 83 யானைகளைக் கொல்ல நமீபியாவும், அதிக எண்ணிக்கை காரணமாக 500 கரடிகளைக் கொல்ல ருமேனியா அரசும் அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

Night
Day