பதற்றத்தைத் தணிக்க பாகிஸ்தான்-ஈரான் பரஸ்பரம் ஒப்புதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாகிஸ்தானும் ஈரானும் பதற்றங்களைத் தணிக்க பரஸ்பரம் ஒப்புக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதம் என ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டி பாகிஸ்தானும் ஈரானும் கடந்த வாரம் மோதலில் ஈடுபட்டன. ஈரான் தாக்குதலில் பாகிஸ்தானில் 2 சிறுமிகளும் பதில் தாக்குதலில் ஈரானில் 9 உயிரிழப்புகளும் நேர்ந்தன. ஏற்கனவே இஸ்ரேல்-ஹமாஸ் போர் நடந்து வரும் நிலையில் இந்த மோதல், பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரித்தது. இரு நாடுகளும் அமைதி காக்க ஐநாவும் அமெரிக்காவும் வேண்டுகோள் விடுக்க, மத்தியஸ்தம் செய்ய சீனா முன்வந்தது. இந்தநிலையில் இரு நாடுகளும் பதற்றத்தைத் தணிக்க ஒப்புக் கொண்டு விட்டதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஜலீல் அப்பாஸ் ஜிலானி தெரிவித்துள்ளார்.

Night
Day