பரிசுப்பொருள் பெற்ற வழக்‍கு : சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் குற்றவாளி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பரிசு பொருள் பெற்ற வழக்கில் சிங்கப்பூர் முன்னாள் அமைச்சரும் இந்திய வம்சாவளியுமான ஈஸ்வரனை குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

சிங்கப்பூர் போக்‍குவரத்துத்துறை முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் தனது பதவிக்காலத்தில் சுமார் 19 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் மதிப்பிலான பரிசுபொருள் பெற்றதாகவும், வழக்கு விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. இதனால் அவரை குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஈஸ்வரனுக்கு அபராதம் மற்றும் அதிகபட்சம் 2 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. சிங்கப்பூரில் கடந்த அரை நூற்றாண்டில் அமைச்சர் ஒருவர் ஊழல் புகாரில் சிக்குவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Night
Day