பாகிஸ்தான் நாடாளுமன்றம் வரும் 29-ம் தேதி கூடும் எனத் தகவல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றம் வரும் 29-ம் தேதி கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் சட்டப்படி, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர், பொதுத் தேர்தல் முடிந்த 21 நாட்களுக்குள் கூட்டப்பட வேண்டும். அதன்படி கடந்த 8-ம் தேதி தேர்தல் நடைபெற்றதால், வரும் 29-ம் தேதிக்குள் நாடாளுமன்றம் கூட்டப்பட்டே ஆக வேண்டும். எனவே இது குறித்து சட்ட அமைச்சகம் பாகிஸ்தான் அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. ஆனால் நாடாளுமன்றம் கூடுவதற்கு இம்ரான் கானின்  பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி எதிர்ப்புத் தெரிவித்து வருவதாகக் கூறப்படுகிறது.

Night
Day