பாகிஸ்தான் : நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக செயல்பட இம்ரான்கான் கட்சி முடிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாகிஸ்தானில் நடந்து முடிந்த பொதுத் தோ்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றியிருந்தாலும், நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சி வரிசையில் அமர முடிவு செய்துள்ளதாக முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சி அறிவித்துள்ளது. நவாஸ் ஷெரீப் மற்றும் பிலாவல் பூட்டோ ஆகியோரின் கட்சிகளுடன் கொள்கை முரண் உள்ளதால் இதில் எந்த ஒரு கட்சியுடனும் இணைந்து ஆட்சியமைக்க மாட்டோம் எனக் கூறியுள்ளது. அதனால் நாடாளுமன்றத்தில் பொறுப்பான எதிர்க்கட்சியாக செயல்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.  இந்தத் தோ்தலில், ராணுவத்தின் ஆதரவு பெற்ற முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீப் ஆட்சியமைப்பாா் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Night
Day