பாக். முன்னாள் அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி தேர்தலில் போட்டியிட தடை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி அடுத்த 5 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சராக பதவி வகித்தவர் ஷா மஹ்மூத் குரேஷி. சைபர் கிரைம் வழக்கில் கைதான இவர், சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீன் பெற்றார். இதனையடுத்து, அடியாலா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட அவர், மீண்டும் கைதானார். இந்நிலையில், ஷா மஹ்மூத் குரேஷி 5 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இதனால் வரும் 8ம் தேதி நடைபெறும் தேர்தலில் குரேஷி போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. 

Night
Day