பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் மன்னிப்பு கோரிய மார்க் ஜூக்கர்பர்க்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

முகநூல், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறியதற்காக பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் மன்னிப்பு கோரினார் மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க்.

அமெரிக்காவில் சமூக வலைதளங்கள் மூலம் பெண் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்க செனட் சபையில் குழந்தைகளின் பாதுகாப்பு சார்ந்த பல்வேறு பிரச்சனைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதில் மெட்டா, டிக் டாக், எக்ஸ் உள்ளிட்ட பல்வேறு முன்னணி வலைதள நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் பங்கேற்றனர். மெட்டா நிறுவனத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்ட போது, திடீரென பாதிக்கப்பட்ட குடும்பங்களை நோக்கி திரும்பிய நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க், தனது நிறுவனத்தின் தவறுக்காக மன்னிப்பு கோரினார். 

Night
Day