பாலஸ்தீனப் பிரதமர் முகம்மது ஷ்டய்யே திடீர் ராஜினாமா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் நீடித்து வரும் நிலையில் பாலஸ்தீன பிரதமர் முகம்மது ஷ்டய்யே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேற்குகரையில் உள்ள பாலஸ்தீன பகுதிகளில் பிரதமர் முஹம்மது ஷ்டய்யே தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பில் இருந்து வந்தது. இந்நிலையில், தனது அரசை கலைத்துவிட்டு புதிய அரசு பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தி தனது ராஜினாமா கடிதத்தை அதிபர் மகமூத் அப்பாஸிடம் ஷ்டய்யே சமர்ப்பித்துள்ளார். காசாவில் இஸ்ரேல் ராணுவத்தின் தொடர் தாக்குதல் எதிரொலியாக இந்த முடிவை எடுத்திருப்பதாகவும், போர் முடிந்த பின், பாலஸ்தீனத்தை நிர்வகிக்க புதிய அரசு அமைவதே சிறந்ததாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இதையடுத்து பாலஸ்தீனத்தில் அமெரிக்க ஆதரவுடன் புதிய அரசு அமையும் எனக் கூறப்படுகிறது.

Night
Day