பிடிவாதத்தை விட்டு விட்டு இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் - மாலத்தீவு அதிபருக்கு அறிவுரை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு பிடிவாதமாக இருப்பதை விட்டுவிட்டு நிதி சவால்களை சமாளிக்க அண்டை நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என முன்னாள் அதிபர் இப்ராஹிம் முகமது சோலிஹ் அறிவுறுத்தியுள்ளார்.
 
மாலேயில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அவர், மாலத்தீவின் நிதிச் சவால்களுக்கு சீனாவிடம் வாங்கிய கடன்களே காரணம் என்றார். ஆனாலும் நமது அண்டை வீட்டார் நமக்கு உதவுவார்கள் என நம்புவதாக குறிப்பிட்டார். அதனால் பிடிவாதமாக இருப்பதை விட்டு விட்டு இந்தியாவுடன் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால் முய்சு தேவையில்லாமல் முரண்டு பிடிப்பதாகவும் சோலிஹ் சாடினார். 

Night
Day