பிரிட்டன் இளவரசி கேட்டுக்கு புற்றுநோய் : கீமோதெரபி சிகிச்சை எடுத்து வருவதாக தகவல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரிட்டன் இளவரசி கேட்டுக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டதை தொடர்ந்து, தான் கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிரிட்டன் இளவரசர் வில்லியமின் மனைவியான 42 வயதான கேட்டுக்கு, கடந்த ஜனவரி மாதம் வயிற்றில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அவருக்கு எடுக்கப்பட்ட சோதனைகளில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், தான் நன்றாக இருப்பதாகவும், மருத்துவக் குழு தனக்கு கீமோதெரபி சிகிச்சையை அளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

Night
Day