பிரேசிலில் மெட்ரோ விபத்து 7 பேர் உயிரிழந்த வழக்‍கில் ரூ.415 கோடி அபராதம் விதித்தது நீதிமன்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரேசிலில் மெட்ரோ விரிவாக்‍க பணிக்‍காக சுரங்கம் தோண்டியபோது ஏற்பட்ட பள்ளத்தில் விழுந்து 7 பேர் உயிரிழந்த வழக்‍கில் 415 கோடி ரூபாய் அபராதம் விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2007 ஆம் ஆண்டு பிரேசில் நாட்டின் சாபாலோ நகரின் பின்ஹெரோ பகுதியில், மெட்ரோ விரிவாக்‍கத்துக்‍காக தொழிலாளர்கள் சுரங்கப்பாதை தோண்டிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஏற்பட்ட பெரும் பள்ளத்தில் விழுந்து 7 பேர் உயிரிழந்ததுடன், பலர் படுகாயமடைந்தனர். விபத்திற்கு காரணமான கட்டுமான நிறுவனங்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மார்கோஸ் டி லிமா போர்டா அளித்த தீர்ப்பில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்‍கும் பாதிக்‍கப்பட்டவர்களுக்‍கும் 415 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதில் சம்பந்தப்பட்டோர் இறந்தாலும் அவர்களின் வாரிசுகள் அபராதத்தை செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

Night
Day