பிரேசில் நாட்டில் லாரி மீது பேருந்து மோதி 38 பேர் உயிரிழப்பு..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரேசில் நாட்டில் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 


பிரேசிலில் மினஸ் கரேஸ் மாகாணத்தில் இருந்து சால் பாலோ நகர் நோக்கி 45 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. தியோபிலோ ஒடானி பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் பேருந்து சென்றுக்கொண்டிருந்த போது, டயர் வெடித்து நிலை தடுமாறியதில், எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்த நிலையில், விபத்து குறித்து பிரேசில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

varient
Night
Day