புதிதாக குழந்தை பெறும் பெற்றோருக்கு ஆயிரம் டாலர்கள் பரிசுத் திட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்‍காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் உள்ள பால்டிமோர் நகரில் 
புதிதாக குழந்தை பெறும் பெற்றோருக்கு ஆயிரம் டாலர்கள் பரிசளிக்கும் திட்டம்  விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.

பால்டிமோர் நகரில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இதனை அதிகரிக்‍கும் வகையிலும் ஏழை எளிய தம்பதிகளுக்‍கு குழந்தை பெற உதவும் வகையிலும், அவர்களின் வறுமையை போக்கவும் புதிதாக குழந்தை பெறும் பெற்றோருக்‍கு ஆயிரம் டாலர்கள் பரிசளிக்‍க பால்டிமோர்​நகர நிர்வாகம் 
திட்டமிட்டுள்ளது. வாக்‍காளர்கள் ஒப்புதல் அளித்தவுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், பேபி போனஸ் திட்டத்தின் கீழ் குழந்தையின் பெற்றோருக்‍கு ஆயிரம் டாலர்கள் வழங்கப்படும் எனவும் அறிவிக்‍கப்பட்டுள்ளது. இதற்காக இந்திய ரூபாய் மதிப்பில் ஆண்டுக்கு சுமார் 58 கோடியே 43 லட்ச ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Night
Day